இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சடர்லைட் உரிமையை சன் டி.வி. பெற்றுள்ளது. இந்த தகவலை சன் டி.வி.யின் சமூக வலைத்தள பக்கம் உறுதி செய்துள்ளது.
விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்’ கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
