(குகதர்சன்)

ஆகஸ்ட்
6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த
மண்டபத்தில் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த சுமார் 400 உறுப்பினர்களினதும் ,
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களதும் பங்கெடுப்புடன் பொது நலவாய நாடுகளின்
உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் தவிசாளரும் ,அகில இலங்கை
உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன தலைவரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க
அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
வஜிர அபேவர்த்தன ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற உள்ளது.
இதற்கான
ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான முதலாவது உயர் மட்டக்கூட்டம் உள்ளுராட்சி
மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சமூக வலுவூட்டல் இராஜாங்க
அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தலைமையில் , உள்ளுராட்சி மாகாண சபைகள்
அமைச்சின் செயலாளர் கமல் பத்மஸ்ரீ , , வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ,
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பிரதிநிதிகள், உட்பட பல்வேறு
தரப்பினரின் பங்கேற்புடன் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத் தக்கது.
