மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த
விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்க;ல்
நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
இனங்களுக்கிடையில் இன
மத நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல குனானந்த நாயக்க
தேரரின் ஆலோசனைக்கு அமையு மட்டக்களப்பு
ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் பிள்ளையார் ஆலயம் ஒன்றினை
நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆலயத்திற்கான அடிக்கல் இன்று
நாட்டப்பட்டது
மாவட்ட செயலக செல்வ விநாயகர்
ஆலய பிரதம குரு ஜெகதிஸ்வர குருக்கள்
தலைமையில் தீபாராதனை வழிபாடுகளுடன் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில்
பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் கலந்துகொண்டு
அடிகல்லினை நாட்டிவைத்தார் இதனை தொடர்ந்து நிகழ்வுக்கு வருசை தந்த பொது மக்களும்
இணைந்து ஆலயத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்





