பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி கோபாலபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.
குறித்த மனுவை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் வெளியாகி வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லோராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.






