பொதுமக்கள் பலரும், தெரியாமல் விடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்கினறனர். இதுவும் குற்றமே. இதன் மூலம் குற்றவாளிகள் தப்பவும் வழிவகுக்கும் என்று மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். பொள்ளாச்சி ஆபாச விடியோக்கள் சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவரும் நிலையில் இணை ஆணையர் இவ்வாறு கூறியுள்ளார்.






