கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியலமைப்பின் மூலமாக நாட்டினைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதுடன், அவ்வாறான தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதற்கு நாம் தயாராக இல்லை.
அத்துடன், அவ்வாறான தலைமைத்துவத்திலிருந்து நாம் வெளியேறவும் தயாராகவே இருக்கின்றோம். அடுத்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவையே ஜனாதிபதியாக்குவோம். அதற்கு மஹிந்தவின் புகைப்படம் ஒன்றே போதும். வேறு புதிய தலைமைத்துவம் எமக்கு அவசியமில்லை.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தடுமாறுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
மேலும், தேர்தல்களைச் சந்திக்கவும் ஐக்கிய தேசிய கட்சி தடுமாறி வருகின்றது. இந்நிலையில் அதிகாரத்தை பகிரவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
