இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்து கனேடிய பிரதமர் Justin Trudeau கவலை வெளியிட்டுள்ளார்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை உற்று கவனித்து வருகின்றோம். அமைதி காக்கும்படி இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இரு நாடுகளுக்குமிடையேயான முரண்பாடு, அப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.
பிரச்சினை தொடர்பாக சுமூக தீர்வை எட்டுவதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றார்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.





