லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மாற்றங்களை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் ஜோடி வில்சன்- ராபவுட் பதவி விலகிய நிலையில், அந்த பதவிக்கு மூத்த விவகார அமைச்சர் பதவியை நிரப்பும் நடவடிக்கையாக இது அமையவுள்ளது.
SNC லாவ்லின் விவகாரம் தொடர்பான செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக முன்னாள் நீதி மற்றும் சட்டமா அதிபர் ஜோடி வில்சன்-ரேபவுட் கடந்த புதன்கிழமை பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.





