எனினும் இந்தப் பாகம் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என பிரான்ஸின் விமான பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டறை ஒலிப்பதிவு கருவி மற்றும் குரல் பதிவுக்கருவி என்பன பிரான்ஸின் விமான சேவைக்கு கையளிக்கப்பட்டது. எனினும் அதில் உள்ள பதிவுகளை வைத்து விமான விபத்துக்கான காரணத்தை அறிவது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா நோக்கி புறப்பட்ட எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
