நைஜீரியாவின் லாகூஸ் நகரில் உள்ள குறித்த 3 மாடி கட்டடம் நேற்று (புதன்கிழமை) இடிந்து விழுந்தது. கட்டட இடிபாட்டுக்குள் பலர் சிக்கி இருந்த நிலையில் மீட்பு பணிகள் மிக விரைவாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததோடு பாதிக்கப்பட்ட நிலையில் 41 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு உத்தியோகப்பூர்வ செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் நிகழ்ந்த அன்று 172 மாணவர்களது வரவு பாடசாலை வரவு இடாப்பில் பதிவாகியுள்ளது. இதேவேளை 41 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லாகோஸ் நகரில் உள்ள குறித்த 3 மாடிக் கட்டடத்தின், 3 வது மாடியில் பாடசாலை அமைந்திருந்தது. அந்தக் கட்டடம் ஏற்கனவே பாழடைந்து காணப்பட்டிருந்ததாகவும், அதனை இடித்துத் தள்ளத் திட்டம் இருந்ததாகவும் லாகோஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
