தருமபுரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழனிசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தி.மு.க, தனது ஆட்சி காலத்தில் மக்களுக்காக எந்ததொரு சிறந்த செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
அந்தவகையில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசு குறித்து பொய்யான பிரசாரங்களை தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகின்றார்.
மேலும் மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
ஆகையால் மக்கள் இவைகளை பார்த்து ஏமாறகூடாது. தமிழகத்தினை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென்றால் சிறந்த வலிமைமிக்க அரசே அவசியம்.
ஆகையால் மக்கள் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும்” என பழனிசாமி தெரிவித்துள்ளார்.






