இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார்.
அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடுகளிற்கான அலுவலகத்தை அமைப்பதை தான் பாராட்டுவதாகவும் இந்த அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப தாமதங்கள் காணப்பட்டாலும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ளதை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு அலுவலகங்களும் சுயாதீனமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை எனது அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
