இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார்.
அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனிதாபிமான உரிமை மீறல்கள் ஆகியவற்றை பாரதூரமான முறையில் மீறியதாக குற்றம்சாட்டப்படும் சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட், இது கவலைதரும் விடயம் என தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியிலுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர், இந்த முக்கியமான நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
