தலைநகர் கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளதாகல் அந்த வீதி தற்காலிகமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களை கலைப்பதற்காகவே பொலிஸார் இந்த கண்ணீர்ப் புகை
மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி – ஹோட்டன் பகுதியில் வாகன நெரிசல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி காரணமாக தற்போது ஹோட்டன் பகுதி உள்ளிட்ட அதனை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.





