வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வரம்பு கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் திறனானது வெறும் 42 வீதமாகவே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மகாவலி நீர்த்தேகத்திலிருந்து நீரை பெற்றுக் கொள்வோர் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் காட்டுத் தீ பரவல்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






