அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழ்வதால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.சர்வதேச பாடசாலை ஒன்றின் தடகள போட்டிகள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டில், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளோம்.
எவராலும் தனித்து வாழ முடியாது. அனைவருக்கும், கனவு மற்றும் இலட்சியம் உண்டு. எனவே அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
நாட்டில் இருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே குரல் கொடுப்பதால் எந்தவித பலனும் கிடையாது. உதாரணமாக கைதட்டும் ஓசையை எடுத்துக்கொண்டால் நான்கு விரல்களும் சேர்ந்தால் மட்டுமே ஓசை வரும் .
அதே போல அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து வாழ்வதால்தான் சிறந்த பலன் கிடைக்கும், எனவே இந்த நிலைப்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்” என கூறினார்.





