LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து கலந்துகொண்ட அதிகளவான இளைஞர்கள் மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாலிபர் முன்னணியின் தலைவராக லோ.தீபாகரன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் செயலாளராக க.சசீந்திரன், பொருளாளர் ம.நிலக்சன், உபதலைவர் து.மதன், உபசெயலாளர் பாலசிங்கம் முரளிதரன், கல்வி தே.மயூரன், விளையாட்டு துறை த.கிருஷ்ணகாந், சுகாதாரம் தேவசிங்கம் திலக்சன், கலை கலாசாரம் த.இன்பராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்னர்.

அத்துடன், நலன்புரி த.விமலராஷ்,சமூகசெயற்பாடு இரா.சாணக்கியன், முன்னாள் போராளிகள் தொடர்பான விடயம் எஸ்.ஜனார்த்தனன், மாற்றுத்திறனாளிகள் விடயதனம் கே. சோபனன்,பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கை அ.கிருரஜன்,அனர்த்த முகாமைத்துவம் ந.துஷ்யனதன், அரசியல் விழிப்புணர்வு கி.சேயோன் ஆகியோர் தேர்வாகினர்.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பொன்.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7