தனது காதல் மனைவியான சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம் செய்து லண்டன் திரும்பியுள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரி ஆர்டிக் வட்டத்தில் நோர்வே ஆயுதப்படைகளால் நடத்தப்படும் பன்னாட்டுக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சென்றிருந்தார்.
இந்த நிலையில் திருமணம் முடித்து தங்களது முதல் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இளவரசர் ஹரி, சுமார் 2,730 மைலகள் தாண்டி, 6 மணி நேரம் பயணம் செய்து தனி விமானத்தில் லண்டன் திரும்பியுள்ளார்.
இதற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 26,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
33 வயதான ஹரி தமது 7 மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு நோர்வேயில் நடைபெறும் ஆயுதப்படைகளால் நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.
இந்தநிலையிலேயே அவர் சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம் செய்து லண்டன் திரும்பியுள்ளார்.
இந்த விடயமானது தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





