சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகளை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பிரித்தானியாவில் நோய்களுக்கு காரணமாக இருப்பதாக கருதப்படும் கெட்ட ஆவிகளை ஊருக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இடப்பட்ட சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Nottinghamshireக்கும் Derbyshire இற்கும் இடையில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள குகைகளில் தொல் பொருள் ஆய்வாளர்கள் இந்த அடையாளங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு கால கட்டத்தில் கொள்ளை நோயாலும் பஞ்சத்தாலும் பந்தாடப்பட்ட பிரித்தானியாவில், பாதாளத்தில் இருந்து வரும் கெட்ட ஆவிகள் நோய், மரணம் மற்றும் பஞ்சம் ஆகியவற்றிற்கு காரணம் என கருதப்பட்டது.
அந்த ஆவிகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக பூமிக்கடியில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகளில் இவ்வாறான சூனியக்காரிகளின் முத்திரைகள் என்னும் அடையாளங்கள் இடப்படுவது வழக்கம்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சூனியக்காரிகளின் முத்திரைகள் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய குகைகளிலேயே இதுதான் மிக அதிகமான சூனியக்காரிகளின் முத்திரைகள் காணப்படும் இடம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் இந்த குகைகளின் கண்டிபிடிப்பால் இந்த பகுதி திடீரென வரலாற்றியலாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் ஆய்வு செய்யும் பிரமாண்டமான, முக்கியத்துவம் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது.





