LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

பா.ஜ.க.தலைமையிலான ஆட்சி கவிழ்வது உறுதி – மு.க ஸ்டாலின்!

பா.ஜ.க.தலைமையிலான ஆட்சி கவிழ்வது உறுதி எனவும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற திருமணநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரவித்த அவர், “வெற்றிடமாகவுள்ள  21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதை அ.தி.மு.க தடுத்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன், வெற்றிடமாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தி.மு.க வரலாற்றில் முக்கியமான நாள் இன்று. முதல் முதலாக கருணாநிதி முதல்வராக பதவி ஏற்ற நாள். பிப்ரவரி 10-ம் தேதி 50 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி இதே நாளில் பதவியேற்றதை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்களுடைய ஆட்சியில் 85 சதவீதப் பணிகளை நிறைவேற்றினோம். ஆனால், இப்போது உள்ள ஆட்சி அதனை முழுவதுமாக நிறைவேற்றவில்லை. 11 சட்டமன்ற உறுப்பினர் தீர்ப்பு விரைவில் வரும். இந்த ஆட்சி கவிழ்வது உறுதி” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7