
ரியா ராஜ்குமார் அவரது மகள் கடந்த வரம் உயிரிழந்த நிலையில் அதன் பின்னர் ரூபேஷ் ராஜ்குமார் என்பவர் தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரூபேஷ் ராஜ்குமார், நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிரம்ப்டன் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடாக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று மாலை சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் தனது மகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட உடனடி தேடுதல் நடவடிக்கையின்போது உயிரிழந்தநிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து 41 வயதுடைய குறித்த சிறுமியின் தந்தை ரூபேஷ் ராஜ்குமார் கடுமையான காயத்துடன் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
