
ஹலிஃபக்ஸ் பிரதான சதுக்கத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு குறித்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தீ விபத்தில் தமது ஏழு குழந்தைகளை இழந்த உறவுகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் நேற்றைய அஞ்சலி நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
ஹலிஃபக்ஸ் மாநகரின் வீடொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் சிரிய அகதிக் குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 3 மாதம் முதல் 17 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
