
வீதிகள் பனியால் மூடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 வாகனங்கள் நேற்று (புதன்கிழமை) ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகின.
இதில் குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தையடுத்து அல்பேர்ட்டா மாகாணத்தில் நேற்று மாலை முக்கிய அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கல்கரியின் மேற்கு பகுதியிலுள்ள நெடுஞ்சாலை 1-இன் ஆபத்தான நெடுஞ்சாலை நிலைமைகள் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அவசரகால எச்சரிக்கையானது இரவு நீக்கப்பட்டுள்ளது. தற்போது, குறித்த நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
