
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை இலகுபடுத்தும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய நீதியமைச்சர் Kathleen Ganley தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் நான்கு பெண் நீதிபதிகளும், இரண்டு ஆண் நீதிபதிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கயை Gregory Stirling, Susan Pepper மற்றும் Gay Binns ஆகியோர் கல்கரி நீதிமன்றத்திலும், ஏனையவர்கள் எட்மன்டன் உள்ளிட்ட மாகாண நீதிமன்றங்களில் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் 33 மாகாண நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சு தெரிவித்துள்ளது.
