பிரேசில் ஜனாதிபதி ஜெயர் போல்சரோ, சாவ் பாலோ வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிமோனியா நோய்த்தொற்றின் அறிகுறி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை இரவு காச்சல் காரணமாக பிரேசில் ஜனாதிபதி ஜெயர் போல்சரோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக நேற்று (வியாழக்கிழமை) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் தற்போது சாவ் பாலோ வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





