LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7