LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

ஸ்விண்டன் கார் தயாரிப்பு தொழிற்சாலையை மூடும் ஹொண்டா நிறுவனம்!

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹொண்டா 2022 ஆம் ஆண்டில் தனது ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாகவும் இதனால் 3500 வேலைகள் பாதிக்கப்படுமெனவும் ஸ்கை செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஹொண்டா நிறுவனம்இதுவரை உத்தியோகபூர்வமாக கருத்து வெளியிடாத நிலையில் தொழிற்சாலையின் எதிர்காலம் தொடர்பான தமது திட்டத்தை ஹொண்டா நிறுவனம் நாளை வெளியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் விற்பனையாகும் 100000 க்கும் மேற்பட்ட சிவிக் கார்களை ஸ்விண்டன் தொழிற்சாலையில் ஹொண்டா நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஹொண்டா நிறுவனத்தின் ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிராக்னெல், பேர்க்ஷையாரில் உள்ள தனது ஐரோப்பிய தலைமையகத்தை ஹொண்டா நிறுவனம் மூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7