LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

உடன்பாடற்ற பிரெக்ஸிற் மிகவும் எதிர்மறையானது: நீதியமைச்சர்

ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது மிகவும் எதிர்மறையான விளைவுகளை பிரித்தானியாவுக்கு விளைவிக்குமென நீதியமைச்சர் டேவிட் கெளக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்குள் ஒப்பந்தமொன்று எட்டப்படுமென நம்புவதாக தெரிவித்த நீதியமைச்சர் அவ்வாறு எட்டப்படாவிடின் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் பிரித்தானியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியமும் பாரிய அளவில் பாதிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தகட்ட பிரெக்ஸிற் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்பந்தமொன்று எட்டப்படுமென தாம் நம்புவதாகவும் டேவிட் கெளக் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒப்பந்தமொன்று எட்டப்படாவிடின் நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாடு ஆகியவை பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7