பேஸ்புக் தளத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை முறியடிப்பதற்கு கடுமையான அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பேஸ்புக் நிறுவனர் மார் ஸுக்கர்பேர்க் தவறான செய்திகள் தொடர்பாக பொறுப்புணச்சியுடன் செயற்படத் தவறியுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றக்குழுவொன்று குற்றம்சாட்டியுள்ளது.
வெளிநாட்டு வல்லரசுகளால் பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்ட தவறான செய்திகள் இங்கிலாந்தின் ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழலுக்கு முன்பும் பின்பும் பேஸ்புக் வணிக நடைமுறைகளை மையமாகக் கொண்டு தவறான செய்தியைப் பற்றிய விசாரணை டிஜிட்டல், கலாசார, ஊடக மற்றும் விளையாட்டு குழுவினால் ஒருவருட காலத்திற்கு முன்னெடுக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள பேஸ்புக் நிறுவனம் அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.





