LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!

பிரெக்ஸிற் மற்றும் யூத எதிர்ப்புத் தொடர்பான தொழிற்கட்சி தலைவர் ஜெரெமி கோர்பினின் அணுகுமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

சுக்கா உமுன்னா, லூசியானா பேர்கர், கிறிஸ் லெஸ்லி, ஏஞ்சலா ஸ்மித், மைக் கேப்ஸ், கவின் ஷுகர் மற்றும் ஆன் கொபேய் ஆகிய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களே தொழிற்கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு மிகுந்த ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

இந்த ஏழு உறுப்பினர்களைத் தொடர்ந்து மேலும் பல தொழிற்கட்சி உறுப்பினர்களும் கட்சியை விட்டு விலகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7