இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.அதன்படி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில், அகில தனஞ்சயவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் லசித் மலிங்க தலைவராகவும் நிரோஷன் திக்வெல்ல உபதலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்வணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவரது பந்துவீச்சு பணியில் சந்தேகமா ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





