டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஆறு வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி மிதமான அளவிலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2017 ஆம் ஆண்டில் 1.8% ஆக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 1.4% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டின் பின்னர் மிகக் குறைந்த அளவில் பொருளாதாக வளர்ச்சி காணப்பட்டது கடந்த வருடமே எனவும் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிற்சாலை உற்பத்தி மற்றும் கார் உற்பத்தியில் காணப்பட்ட மந்தநிலை உட்பட ஏனைய சிலகாரணிகளாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரெக்ஸிற் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்றநிலை மற்றும் பலவீனமான உலகளாவிய பொருளாதாரம் காரணமாக 2019 ஆம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.





