கெம்லுப்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வான்கூவரில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள1900 பிளொக் ட்ரான்க்கியுலி வீதியிலேயே இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ரோயல் இன்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் ஒருவரின் நிலை தீவிர நிலையில் உள்ளதாகவும், மற்றொருவரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





