LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 16, 2019

ரெக்ஸ்டல் துப்பாக்கி சூடு: கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

ரெக்ஸ்டலில் உள்ள அடுக்குமாடியொன்றில், சுட்டுக் கொல்லப்பட்ட ஆணின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

21 பெர்கமோட் அவனியூ இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸால் புஃலிவார்ட் பகுதியில், கடந்த புதன் கிழமை இச்சம்பவம் சம்பவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது, 20 வயது மதிக்கதக்க ஒருவரை படுகாயங்களுடன் பொலிஸார் கண்டதாகவும், அப்போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தற்போது நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் 28 வயதான ரொறன்ரோவை சேர்ந்த டெஸ்ஃபா வெல்ஷ்-ஹோப் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

எனினும் இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து எவ்வித தகவலும் தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் குறித்த நகரில் பதிவான எட்டாவது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7