
ஆலங்குளம் எல்லை வீதியில் வசிக்கும் கருவேல்தம்பி ஜெயாபரன் என்பவரது குடிசை வீடு தீ விபத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த நபரின் மனைவி உணவு சமைத்து முடித்து விட்டு அடுப்பிலுள்ள நெருப்பினை அணைக்காமல் வெளியில் சென்று விட்டார்.
வெளியில் சென்ற சமயத்தில் காற்று வீசியபோது அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பரவியதால் குடிசை வீடு முற்றாக தீப்படித்து எறிந்துள்ளது. இதன்போது வீட்டின் உரிமையாளர் தொழில் நிமிர்தம் சென்றுள்ளதுடன், மூன்று பிள்ளைகளும் வெளியில் சென்றுள்ளனர்.
இத்தீ விபத்தினால் இவர்களுடைய உடமைகள் முற்றுமுழுதாக எரிந்துள்ளதுடன், பிள்ளைகளின் கல்வி உபகரணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் இவர்கள் பெரிதும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.
இதனை கேள்வியுற்ற வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஹிர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மீண்டும் அவ்வீட்டினை புனரமைப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகைப் பணத்தினை வழங்கி வைத்தார்.
இவரோடு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அன்டனும் சென்றிருந்தார்.
