வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.என்.ஜே.நுவான் வெதசிங்க, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பரிசோதனை நிகழ்வின் போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.என்.ஜே.நுவான் வெதசிங்க கலந்து கொண்டு ஆயுதங்களினதும், வாகனங்களினதும் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள் குறித்தும் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
