LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

வெனிசுவேலா நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா அழைப்பு

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் இன்று (சனிக்கிழமை) உரையாற்றிய அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டுள்ள ஜுவான் கெய்டோ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஏனைய உலக நாடுகளும் அவரை அங்கீகரிக்க வேண்டும். சர்வாதிகாரியான மதுரோ பதவி விலக வேண்டும்.

இந்நிலையில், சுதந்திரத்திற்காக முன்னோக்கி நகர்ந்து ஜுவான் கெய்டோவை சட்டபூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7