LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

வித்தியாசமான அனுபவத்தை தரும் ‘அலாவுதீனின் அற்புத கமெரா’ டிரெய்லர்

‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் நடித்து இயக்கியுள்ள ‘அலாவுதீனின் அற்புத கமெரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. உலகின் முதல் 4K HDR டிரெய்லராக வெளியாகிய இதனை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கயல் ஆனந்தி, எஸ்.நந்தகோபால் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். பாட்ஷா ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

“இந்த வாழ்க்கையில ஏதாவது அதிசயம் நிகழ்ந்திராதா? என்ற ஏக்கத்தில் நம்ம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் வாழ்க்கையே ஒரு அதிசயம் தான்” என்ற வசனத்துடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது.

அலாவுதீனிடம் கிடைத்த அற்புத விளக்கு போல் இந்த படத்தின் நாயகன் நவீனிடம் இருக்கும் அற்புத கமெராவும் அதன் பயனும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் தான் இப்படத்தின் கதையாக அமைகின்றது.

இந்தப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7