LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

இரண்டு மாதங்களில் முடிவடைந்துள்ள விஜய்சேதுபதியின் படம்

கொலிவூட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர்.

ஒருசில நடிகர்களின் திரைப்படங்கள் வருடக்கணக்கில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் விஜய்சேதுபதியின் படங்களின் படப்பிடிப்பு தொடங்கி சில மாதங்களில் முடிவடைந்துவிடும்.

அந்தவகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இப்படத்தின் நிறைவு நாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

பிரபல இயக்குநர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவும் அவருடைய இரண்டு இசை வாரிசுகளான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை யுவன் ஷங்கர்ராஜா தயாரித்துள்ளார்.

படப்படிப்பு முடிவடைந்ததையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7