எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமென அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளதெனவும் ஜோன் போல்டன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையால், பயங்கரவாதத்தை ஒழிக்கும் எத்தகைய செயற்பாடுகளுக்கும் இந்தியாவுடன், அமெரிக்கா துணை நிற்குமென அவர் உறுதியளித்துள்ளார்.
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளதெனவும் குறித்த தொலைபேசி உரையாடலின்போது ஜோன் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.





