புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் பாகிஸ்தானில் எந்த இந்திய திரைப்படமும் திரையிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக அஜய்தேவ்கான் நடித்த ‘டோட்டல் தமால்’ என்ற திரைப்படம் பாகிஸ்தானில் திரையிடப்படாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





