கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெரா நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதி ஊடான போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.கங்காராம விகாரையின் நவம் பெரஹெரா இடம்பெறவுள்ளதால் இரவு 7 மணி முதல் அப்பகுதி ஊடான போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொம்பனி வீதி சுற்றுவட்டம் முதல் பித்தலை சந்தி வரையான வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.





