அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் லீலாவதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.
எனவே இந்த ஆண்டில் ஐந்து மாதங்களில் மூன்று நயன்தாரா படங்கள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.





