சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கிய ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருவதுடன் வரும் மார்ச் முதல் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.
தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இப்படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளாவார்.
கல்யாணி ஏற்கனவே ‘வான்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இப்படம் அவருடைய இரண்டாவது தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.





