இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள அருங்காட்சியகத்தில் இந்த மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு செயற்பட்டுவரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க விடயங்கள் மற்றும் பிரபலங்களுக்கு சிலைகள் வைக்கப்படுவது தனிச் சிறப்பாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில், முன்னாள் உலக அழகியும் உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அவர் விருது விழாவொன்றில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த சிவப்பு நிற உடையில் அந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ், நிச்சயதார்த்தத்தின் போது பரிசளித்த வைர மோதிரம் போன்ற ஒரு மோதிரமும் அந்த மெழுகு சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.





