LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!

நோர்த் யோர்க்கில் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கும் ஆண் ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த உணவுப்பொருட்களை அபகரித்த சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு, குறித்த அந்த உணவு வினியோகஸ்தர் ஜேன் வீதி மற்றும் ஹீத்ரோ டிரைவ் பகுதியில் இருந்த சமயம், தலைவரை மூடிய குளிர் அங்கியை அணிந்திருந்த இருவர் அவரை அணுகி, கத்தியால் குத்தி, அவர் வினியோகத்திற்காக எடுத்து வந்திருந்த உணவுப்பொருட்களை அபகரித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடிச் சென்றுள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் இரண்டு பதின்மவயதினர் கைது செய்யப்பட்டுள்ளதை நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும், ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டமை, கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7