இந்த நிதிஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சமூக, சுற்றுச்சூழல் அபிவிருத்தி மற்றும் வறுமை போன்றவற்றை மையமாக கொண்டே திட்டமிட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா நிதி அமைச்சர் கரோல் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிதிஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், சிறுபான்மையினரின் வாழ்க்கைமுறை மற்றும் சேவைகளை மேம்படுத்தல், ஒருநிலையான பொருளாதாரத்தை உறுதிசெய்தல் போன்றனவே புதிய ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் குறிக்கோள் என அவர் கூறினார்.
அத்தோடு ஜேம்ஸ் வரவு-செலவு திட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை பார்க்கும்போது, ஏனைய மாகாணங்களின் வலதுசாரிக் கொள்கைகளுடன் ஒப்பிடுகையில் பலவேறுபாடு உள்ளது என்றும் பேராசிரியர் டேவிட் பிளாக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது





