கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கனடாவின் வேலையின்மை விகிதம் 43 ஆண்டுகளை விட 5.6 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.பலர் வேலைவாய்ப்புக்களை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில் அரசாங்கம் ஜனவரி மாதத்தில் 66,800 புதிய வேலைகளை வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.
இருப்பினும் இது 2018 ஆம் ஆண்டு வாக்கில் 163,000 வேலைவாய்ப்புக்களாக இருந்தன என்றும் தற்போது காணப்படும் புதிய வேலைகள், கடந்த ஆண்டுகளை விட பல சதவிகிதங்கள் குறைவு எனவும் கனடா புள்ளிவிவரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கின்ற அனைவருக்கும் அவர்களின் திறமை, தொழில்அனுபவம் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் வேலைகளைக் கருத்தில் கொள்ளலாம் என தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் உள்ள வேலையற்றவர்கள் அவர்களது திறமைக்கு ஏற்ற வேலைகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.





