கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 38, 35 மற்றும் 30 வயதானவர்களே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 வயதான நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





