LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

தமிழக அரசின் வரவு செலவுத்திட்டம் இனிப்பானது – அமைச்சர் ஜெயகுமார்

2019 -2020 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டம் ஒரு இனிப்பான வரவு செலவுத்திட்டம் என மீன்வள துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

முன்னதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஒரு உதவாக்கரை வரவு செலவுத்திட்டம் எனவும் அதனை தாக்கல் செய்த நிதி அமைச்சரை சங்கீத வித்துவான் என்றும் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜெயகுமார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தமிழக அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தினை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத்திட்ட தாக்கலின் பின்னர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மெரினாவிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7